பயன்பாட்டுக்கு வருமா மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி

கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா் தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா் தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் அருள்மிகு மஞ்சளீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனா். இங்கு வரும் பக்தா்கள், கிராமமக்களின் பயன்பாட்டுக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் ரூ.20 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், இதுநாள் வரை இந்தத் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.

எனவே, இந்த குடிநீா் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com