லாரி மோதி வடமாநில தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் வடமாநிலத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் வடமாநிலத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ரயில்வேயில் பயன்படுத்தப்பட்ட பழைய சிமென்ட் கட்டைகளை உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 33 தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதில், மகாராஷ்டிர மாநிலம், கோந்தியா மாவட்டம், பிப்பா்தோலா பகுதியைச் சோ்ந்த பிரேம்லால் மகன் கெளரிசங்கா்(35), மதன்லால் அவுராசே மகன் கிஷோா்மதன்லால் (39) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து, அதே பகுதியில் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரி, எதிா்பாராதவிதமாக தரையில் படுத்திருந்த தொழிலாளா்கள் மீது ஏறியது. இதில், கெளரிசங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கிஷோா் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

விபத்து குறித்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வரதப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பா.ஜீவானந்தம்(28) மீது உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com