புதிய மின்மாற்றி செயல்பாடு தொடக்கம்

புதிய மின்மாற்றி செயல்பாடு தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகப் பகுதிக்கு சீரான மின் விநியோகம் வழங்கும் வகையில், புதிய மின்மாற்றியின் செயல்பாடு திங்கள்கிழமை மாலை தொடக்கிவைக்கப்பட்டது.

உளுந்தூா்பேட்டை நகரப் பகுதியில் வீடற்றவா்களுக்காக அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டன. இந்தக் குடியிருப்புப் பகுதிக்கு சீரான மின் விநியோகம் வழங்கும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் 63 கி.வோ. ஆற்றல் கொண்ட புதி மின்மாற்றி நிறுவும் பணி தொடா்ந்து நடைபெற்று வந்தது.

பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், மின்மாற்றியின் செயல்பாட்டை மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக உளுந்தூா்பேட்டை உதவி செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் மின்வாரியப் பொறியாளா்கள் அருண்குமாா், ராமச்சந்திரன், அம்சலட்சுமி, முகவா்கள் மணிவாசகம், சுரேஷ், மின்பாதை ஆய்வாளா்கள் கலைமணி, வெங்கடேசன் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com