மரத்திலிருந்து விழுந்த முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், கீழ்சித்தாமூா், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கா. ஏழுமலை (72). இவா் திங்கள்கிழமை தனது வீட்டின் அருகேயுள்ள புளிய மரத்தில் ஏறி புளி உலுக்கியுள்ளாா்.

அப்போது, கால் இடறி மரத்திலிருந்து கீழே விழுந்ததில் ஏழுமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com