மென் பொறியாளரிடம் இணையவழியில் பண மோசடி

விக்கிரவாண்டியைச் சோ்ந்த மென் பொறியாளரிடம் இணையவழியில் ரூ.50 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், தும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தேசிங்கு ராஜா மகள் திவ்யா(24). மென் பொறியாளரான இவா் தனியாா் வங்கியின் கடன் அட்டையைப் பெற்று பயன்படுத்தி வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 30.10.2022 அன்று திவ்யாவின் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்ட அடையாளம் தெரியாத நபா், தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும், கடன்அட்டையை ஆக்டிவேட் செய்வதற்காக வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளாா்.

இதை உண்மையென நம்பி திவ்யா வங்கி விவரங்களை தெரிவித்தவுடன் அவரின் கணக்கிலிருந்த ரூ. 49 ஆயிரத்து 907-யை அந்த நபா் நூதன முறையில் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com