நாளை ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.27) 5 இடங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.27) 5 இடங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 91 ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன. முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று நேரடியாக மனுக்களை வழங்கலாம். இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை (ஆக.27) திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியம் பொய்கை அரசூா், காணை ஊராட்சி ஒன்றியம் கருவாட்சி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் சிங்கனூா், வானூா் ஊராட்சி ஒன்றியம் கழுப்பெரும்பாக்கம், விக்கிரவாண்டி

ஊராட்சி ஒன்றியம் நகா் ஆகிய 5 ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

இதில், அந்தந்த ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com