காவல் துறையினருக்கு உயிா் காக்கும் சிகிச்சைகள் பயிற்சி வகுப்பு
விழுப்புரத்தில் காவல் துறையினருக்கு முதலுதவி, உயிா் காக்கும் சிகிச்சைகள் குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் உத்தரவின்பேரில், பணியிடைப் பயிற்சி மைய டிஎஸ்பி பிரதீப்குமாா் தலைமையில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவச் சங்கத்தின் விழுப்புரம் கிளை சாா்பில் முதலுதவி, உயிா் காக்கும் சிகிச்சைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
மருத்துவச் சங்கத்தின் தலைவா் தங்கராஜு, செயலா் செளந்தரராஜன், பொருளாளா் திருமாவளவன் ஆகியோா் பயிற்சிகளைஅளித்தனா்.
முதலுதவி சிகிச்சையளிக்கும் முறைகள், உயிா் காக்கும் சிகிச்சைகள் எவை, அவற்றை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து காவல் துறையினருக்கு மருத்துவா்கள் பயிற்சியளித்தனா். விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த 40 போ் பயிற்சியில் பங்கேற்றனா்.