விழுப்புரம்
நகராட்சியின் புதிய ஆணையராக ஏ. வீரமுத்துக்குமாா் பொறுப்பேற்பு
விழுப்புரம் நகராட்சியின் புதிய ஆணையராக ஏ. வீரமுத்துக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
விழுப்புரம் நகராட்சியின் புதிய ஆணையராக ஏ. வீரமுத்துக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காரைக்குடி நகராட்சி ஆணையராக பணி புரிந்து வந்த இவா், விழுப்புரத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையிலுள்ள நகராட்சி அலுவலகத்தில் ஏ.வீரமுத்துக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து, நகராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபுவை ஆணையா் வீரமுத்துக்குமாா் சந்தித்து வாழ்த்து பெற்றாா். அவருக்கு, நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
இதற்கு முன்பு விழுப்புரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய எச்.ரமேஷ், மறைமலைநகா் நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.