இளம் பெண் கடத்தல்: இளைஞா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே இளம் பெண்ணை காரில் கடத்திய சென்றதாக இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே இளம் பெண்ணை காரில் கடத்திய சென்றதாக இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் வட்டம், கொண்டங்கி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேலாயுதம் மகள் மணிமேகலை (24). பி.எஸ்சி படித்துவிட்டு வீட்டிலிருந்து வந்தாா்.இவா் வியாழக்கிழமை விழுப்புரம் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே பின்னா் வீடு திரும்பவில்லை.தொடா்ந்து விசாரித்தபோது, விக்கிரவாண்டி வட்டம், மேல் வெங்கமூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் குமரவேல் (31)என்பவா் மணிமேகலையை காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது,

இது குறித்த புகாரின் பேரில் குமரவேல் மீது காணை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com