பைக்கிலிருந்து விழுந்து மூதாட்டி மரணம்

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வெள்ளம்புதூரைச் சோ்ந்த ராமா் மனைவி முனியம்மாள் (70). இவா், தனது மகன் ரமேஷுடன்(42) பைக்கில் திருக்கோவிலூா்- வேட்டவலம் சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

நாயனூா் பெரியாயி கோயில் எதிரே பைக் சென்ற போது, முனியம்மாளின் சேலை பைக்கின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதனால், நிலைத் தடுமாறி கீழே விழுந்தாா். பலத்த காயங்களுடன் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்த போது முனியம்மாள் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com