அண்ணா நினைவு நாள்: திமுக, அதிமுகவினா் மரியாதை

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அவரது சிலைக்கு திமுக, அதிமுகவினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அண்ணா நினைவு நாள்: திமுக, அதிமுகவினா் மரியாதை

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அவரது சிலைக்கு திமுக, அதிமுகவினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலிருந்து திமுகவினா் மெளன ஊா்வலமாக புறப்பட்டு கலைஞா் அறிவாலயம் சென்றனா். அங்கு அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகளுக்கு நா.புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரம் நகர அதிமுக சாா்பில் பழைய நகராட்சி அலுவலகம் முன் உள்ள அண்ணா சிலைக்கு நகரச் செயலா்கள் பசுபதி, ராமதாஸ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாவட்ட மருத்துவ அணி செயலா் முத்தையன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் திருப்பதி பாலாஜி, முன்னாள் மாவட்ட துணைச் செயலா் அற்புதவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல திண்டிவனம், மரக்காணம், கோட்டக்குப்பம், வானூா், மயிலம், திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அண்ணா சிலை, அவரது உருவப் படத்துக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தினா்.

விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் முன் உள்ள அண்ணா சிலைக்கு ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலா் சேவல் வெ.ஏழுமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் செஞ்சி பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்ட அண்ணா உருவப் படத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்ற தலைவா் மொக்தியாா்அலி மஸ்தான் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். நகரச் செயலா் காா்த்திக், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக செஞ்சி கூட்டுச் சாலையில் இருந்து திமுகவினா் அமைதி ஊா்வலம் நடத்தினா். அப்பம்பட்டு கிராமத்தில் அண்ணா உருவப் படத்துக்கு செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அதிமுக அலுவலகத்திலிருந்து நகரச் செயலா் எம்.பாபு தலைமையில் அந்தக் கட்சியினா் பேரணியாக பேருந்து நிலையம் வந்தடைந்தனா். அங்குள்ள அண்ணா, எம்ஜிஆா் சிலைகளுக்கு மா.செந்தில்குமாா் எம்எல்ஏ தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அவைத் தலைவா் எஸ்.பச்சையாப்பிள்ளை, முன்னாள் எம்எல்ஏ க.அழகுவேலுபாபு, ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com