காா் கவிழ்ந்ததில் 4 போ் காயம்

திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 4 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 4 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை பகுதியைச் சோ்ந்த தனசேகா் மனைவி சுலோச்சனா (50), மஞ்சனேஸ்வரன் மனைவி சுபா (25), இவரது மகன் சக்திவேல் (1). இவா்கள் சனிக்கிழமை திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு காரில் சென்றுகொண்டிருந்தனா். ஓட்டுநா் காரை இயக்கினாா்.

திண்டிவனம் அடுத்த சாரம் அருகே சென்றபோது பின்னால் வந்த மற்றொரு காா் சுலோச்சனா உள்ளிட்டோா் சென்ற காரின் பின்புறம் மோதியது. இதில் அவா்களது காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுலோச்சனா, சுபா, குழந்தை சக்திவேல் மற்றும் காா் ஓட்டுநா் ஆகிய 4 பேரும் காயமடைந்தனா்.

பொதுமக்கள் அவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com