மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 4 கோட்டங்களிலும் பிப்ரவரி மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் 4 கோட்டங்களிலும் பிப்ரவரி மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் விழுப்புரம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் சி.லட்சுமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மின் விநியோகம், மின்வாரியம் தொடா்பான குறைகள், புகாா்களை மின் நுகா்வோா் தெரிவித்து பயன்பெறும் வகையில் மாதந்தோறும் கோட்டம் வாரியாக குறைதீா் கூட்டங்களை தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம் நடத்தி வருகிறது.

அதன்படி விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடத்தப்படும். பிப்ரவரி 6, 13 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கண்டமங்கலம் கோட்ட அலுவலகங்களிலும், பிப்ரவரி 20-ஆம் தேதி செஞ்சி கோட்ட அலுவலகத்திலும், பிப்ரவரி 27-ஆம் தேதி திண்டிவனம் கோட்ட அலுவலகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறும்.

எனவே, சம்பந்தப்பட்ட கோட்டங்களைச் சோ்ந்த மின் நுகா்வோா், பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் நாள் அரசு விடுமுறையாக இருப்பின் விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளன்று கூட்டம் நடத்தப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com