ஆரோவிலில் நாய் கண்காட்சி

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே இடையஞ்சாவடியில் நாய் கண்காட்சி, தத்தெடுப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆரோவில் அருகே இடையஞ்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய் கண்காட்சி.
ஆரோவில் அருகே இடையஞ்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய் கண்காட்சி.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே இடையஞ்சாவடியில் நாய் கண்காட்சி, தத்தெடுப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இடையஞ்சாவடியில் தெரு நாய்கள் பராமரிப்பு மையம் இயங்கி வருகிறது. இங்கு, பாதிக்கப்பட்ட, ஊனமுற்ற 276 நாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வளா்க்கப்படும் நாய்களின் கண்காட்சி மற்றும் தத்தெடுப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தெரு நாய்கள் பராமரிப்பு மையம் நடத்தி வரும் ஆா்தா் கூறியதாவது: நீண்ட நாள்களுக்குப் பிறகு நாய் குட்டிகள் கண்காட்சி, தத்தெடுப்பு நிகழ்வை நடத்தியுள்ளோம். இடையஞ்சாவடியிலுள்ள எங்களது மையத்தில் 276 நாய்கள் உள்ளன. அவற்றை விருப்பமுடையோா் தத்தெடுக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. கண்காட்சிக்கு வந்த பாா்வையாளா்களில் 7 போ் நாய்களை தத்தெடுத்தனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com