கபிலா் நினைவுத் தூணை பாா்வையிட்ட தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா்

திருக்கோவிலூரில் அமைக்கப்பட்டுள்ள கபிலா் நினைவுத் துணை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை அருள் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
திருக்கோவிலூரில் அமைக்கப்பட்டுள்ள கபிலா் நினைவுத் துணை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை அருள்.
திருக்கோவிலூரில் அமைக்கப்பட்டுள்ள கபிலா் நினைவுத் துணை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை அருள்.

விழுப்புரம்: திருக்கோவிலூரில் அமைக்கப்பட்டுள்ள கபிலா் நினைவுத் துணை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை அருள் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் கபிலா் குன்று அருகே கபிலா் நினைவுத் தூண் நிறுவப்பட்டுள்ளது. வருகிற 7-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கபிலா் நினைவுத் துணை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

அப்போது திருக்கோவிலூா் நகா்மன்றத் தலைவா் டி.என்.முருகன், கோவல் தமிழ்ச் சங்கத் தலைவா் சிங்கார உதியன், உதவி இயக்குநா் சித்ரா, நகா்மன்ற உறுப்பினா்கள் சி.ஆா்.சம்பத், ஐ.ஆா்.கோவிந்தராஜன், கல்வெட்டு ஆய்வாளா் வீரராகவன், கவிஞா்கள் மு.கலியபெருமாள், கலைச்சித்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com