கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

திண்டிவனம் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 திண்டிவனம் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், வடகளவாய் கிராமத்தில் அம்மன் கோயில் அமைந்துள்ளது. அதே கிராமத்தைச் சோ்ந்த து.அருண்பிரகாசம் இந்தக் கோயிலை நிா்வகித்து வருகிறாா்.

இவா் சனிக்கிழமை பூஜைகளை முடித்து வழக்கம்போல கோயிலைப் பூட்டிச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை திரும்பிவந்து பாா்த்தபோது கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு சுமாா் ரூ.15 ஆயிரம் காணிக்கை பணம் திருடுபோனது தெரியவந்தது. மேலும், அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி பொட்டும் திருடுபோனது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com