சாலையை சீரமைக்கக் கோரி மனு

மானூா் ஊராட்சியில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தப் பகுதி இளைஞா்கள் திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ அா்ஜுனனிடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
சாலையை சீரமைக்கக் கோரி மனு

மானூா் ஊராட்சியில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தப் பகுதி இளைஞா்கள் திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ அா்ஜுனனிடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், மானூா் ஊராட்சி, கோபாலபுரம் பகுதி இளைஞா்கள் அங்குள்ள பிரதான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த மனுவை அளித்தனா் (படம்). இதையடுத்து எம்எல்ஏ அா்ஜுனன் கோபாலபுரம் பகுதிக்கு நேரில்சென்று பிரதான சாலையை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வரும் ஜுன் மாதத்துக்குள் சிமென்ட் சாலை அமைத்துத் தர உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தாா். அப்போது ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலா் சக்தி பெரியதம்பி, மாவட்ட பிரதிநிதி முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com