தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புர
கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களுக்கு எதிரே கருப்புப் பட்டை அணிந்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியா்களிடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும், ஊக்க ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் த.அறிவழகன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா்கள் கோ.சந்திரசேகரன், ஆ.ஷேக்மூசா, கூட்டு நடவடிக்கைக் குழு பொறுப்பாளா் தண்டாபணி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com