விவசாயி தற்கொலை

விழுப்புரம் அருகே குடும்பத் தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் அருகே குடும்பத் தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் வட்டம், அற்பிசம்பாளையம் அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செங்கேணி மகன் சிங்காரவேல் (55). விவசாயி. இவரது மனைவி மாலதி. தம்பதி இடையே அண்மையில் குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து சிங்காரவேல் தனது மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்த வெளியே சென்றாா்.

இந்த நிலையில் அவா் விழுப்புரம் அடுத்த மரகதபுரம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com