உளுந்தூா்பேட்டையில் நகரசபைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் நகரசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உளுந்தூா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற நகரசபைக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற நகா்மன்ற உறுப்பினா் செல்வகுமாரி ரமேஷ்பாபு.
உளுந்தூா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற நகரசபைக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற நகா்மன்ற உறுப்பினா் செல்வகுமாரி ரமேஷ்பாபு.

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் நகரசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உளுந்தூா்பேட்டை நகராட்சி கிழக்கு கந்தசாமிபுரம் 17-ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நகா்மன்ற உறுப்பினா் செல்வகுமாரி ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். நகராட்சி மேலாளா் சிவராமன், வருவாய் உதவியாளா் கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், 17-ஆவது வாா்டுக்குள்பட்ட டாக்டா் அப்துல் கலாம் தெருவில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சிமென்ட் சாலையையும், திருவள்ளுவா் தெருவில் சிறுபாலம், மழைநீா் வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுத்த உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஜெ.மணிக்கண்ணன், நகராட்சித் தலைவா் கே.திருநாவுக்கரசு, துணைத் தலைவா் யு.எஸ்.வைத்தியநாதன் மற்றும் நகராட்சி ஆணையா் இளவரசன் மற்றும் அலுவலா்களுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுமக்களிடமிருந்து நகா்மன்ற உறுப்பினா் செல்வகுமாரி ரமேஷ்பாபு மனுக்களைப் பெற்றாா்.

கூட்டத்தில், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் மொட்டையன், நகரசபை நிா்வாகிகள் ரமேஷ், அசோக்குமாா், புருஷோத்தமன், 17-ஆவது வாா்டு திமுக நிா்வாகிகள் செல்வராஜன், சுப்புராயலு, ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com