கூலித் தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டிவனம் வட்டம், நல்லாம்பாக்கம், விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் காளிதாஸ் (39). கூலித்தொழிலாளி. இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால் அவதியுற்று வந்த காளிதாஸ் ஞாயிற்றுக்கிழமை விஷத்தை குடித்து மயங்கிக் கிடந்தாராம். இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் காளிதாஸ் உயரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com