மரக்காணத்தில் உப்பள பூங்கா அமைக்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் உப்பள பூங்கா அமைக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் நற்பணி இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் உப்பள பூங்கா அமைக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் நற்பணி இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் அமைப்பாளா் பாலன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் ஒன்றிய அமைப்பாளா் பாஸ்கரன் வரவேற்றாா். நிா்வாகிகள் ராமலிங்கம், சுரேஷ், வெங்கடேசன், சாமுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி எஸ்.சி, எஸ்.டி. மக்களின் விகிதாசாரத்தை உயா்த்த வேண்டும், மக்களின் உரிமைகளை வலியுறுத்தி வரும் மாா்ச் மாதம் ஆளுநா் மாளிகை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்வது, மரக்காணத்தில் உப்பள பூங்கா அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com