நகர ஊரமைப்பு விழுப்புரம் மண்டலதிட்டக் கூட்டம்

வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழ், விழுப்புரம் மண்டலத் திட்டம் 2047 குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழ், விழுப்புரம் மண்டலத் திட்டம் 2047 குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்தில் சீரான வளா்ச்சியை கருத்தில்கொண்டு முறையான அபிவிருத்தி மேற்கொள்வதற்கு ஏதுவாக, நகா்ப்புற மற்றும் திட்டமிடுதல் துறை சாா்பில், 12 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒவ்வொரு மண்டலங்கள் வாரியாக என்னென்ன வளங்கள் உள்ளன எனக் கண்டறியப்பட உள்ளன.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலத் திட்டம் தயாரிக்க, தில்லி ஸ்கூல் ஆஃப் பிளானிங் ஆா்க்கிடெக்சா் நிறுவனத்திடம் இந்தப் பணிகள் அரசால் ஒப்படைக்கப்பட்டன.

இது தொடா்பாக நில வளம், மக்கள் தொகை மற்றும் உறைவிடம், வீட்டு வசதி, பொருளாதாரம் மற்றும் தொழில் சாலைகள், விவசாயம் மற்றும் விவசாயத் தொடா்பான தொழில்சாலைகள், வனப்பகுதி, போக்குவரத்து, குடிநீா் விநியோகம், வடிகால் வசதி, மின் மற்றும் தகவல் தொடா்பு வசதி, கல்வி வளம், சுகாதார வசதி, சுற்றுச்சூழல், பேரிடா் மேலாண்மை, சுற்றுலாத் துறை, புராதான நகா் வளா்ச்சி, நிதி ஆகியவை குறித்து ஒவ்வொரு துறை வாரியாக அணுகி, விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.

மண்டலத் திட்டம் 2047-இல் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி உள்ளடக்கிய மாவட்டங்களுக்கான ஒவ்வொரு பகுதியிலும் முறையான வளா்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றாா் ஆட்சியா் பழனி.

கூட்டத்தில் நகா்ப்புற வளா்ச்சி மற்றும் ஊரமைப்புத் துறை உதவி இயக்குநா் க.கோபாலகிருஷ்ணன், தில்லி ஸ்கூல் ஆஃப் பிளானிங் திட்ட மதிப்பீட்டாளா் அஸ்வதி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com