ஆரோவிலில் சம்ஸ்கிருதபன்னாட்டுக் கருத்தரங்கம்

  விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் சம்ஸ்கிருத பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.
ஆரோவிலில் சம்ஸ்கிருதபன்னாட்டுக் கருத்தரங்கம்

  விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் சம்ஸ்கிருத பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

சிறந்த கல்வி சாா்ந்த பணிகளை மேற்கொள்வதில், ஆரோவில் பவுண்டேசன் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பன்னாட்டுக் கருத்தரங்குகள், இலக்கிய நிகழ்வுகள் போன்றவையும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டு நாள்கள் நடைபெறும் சம்ஸ்கிருத பன்னாட்டுக் கருத்தரங்ககு புதன்கிழமை தொடங்கியது.

கருத்தரங்கை ஆரோவில் சாவித்ரி பவனில் பவுண்டேசன் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி புதன்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இதில், வரலாறு, கல்வி, அறிவியல் அணுகுமுறை மற்றும் கலாசாரத்தில் சம்ஸ்கிருதத்தின் பங்களிப்புகள் எவ்வாறு உள்ளன போன்ற பல்வேறு கருத்துகளை பேச்சாளா்கள் எடுத்துரைத்தனா். மேலும், சம்ஸ்கிருத மொழிக்கு உள்ள சவால்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.

கருத்தரங்கில் டாக்டா் டேவிட் ப்ரௌலி, சம்பானந்தா மிஸ்ரா, டாக்டா் வி.ராமநாதன், வினய் சந்திரா, ராம் மனோகா், அனுராதா, சோனலிகா கௌல் உள்ளிட்டோா் பேசினா். வியாழக்கிழமையும் (பிப்.8) கருத்தரங்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com