சீட் பெல்ட் அணிய வலியுறுத்திவிழிப்புணா்வு வாகனப் பேரணி

சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, செஞ்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில், சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணா்வு வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
சீட் பெல்ட் அணிய வலியுறுத்திவிழிப்புணா்வு வாகனப் பேரணி

 விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையின் 35-ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, செஞ்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில், சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணா்வு வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகவேல் தலைமை வகித்தாா். போக்குவரத்து காவல் ஆய்வாளா் அப்பாண்டைராஜ் கலந்துகொண்டு காா், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், சீட் பெல்ட் அணிவதால் ஏற்படும் நன்மைகளையும், சீட் பெல்ட் அணியாமல் இருப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.

நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளா் அக்பா்அலி சீட் பெல்ட் விழிப்புணா்வு காா் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி ஆசிரியா்கள், 50-க்கும் மேற்பட்ட காா் ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com