பள்ளி மாணவி தூக்குப்போட்டுத் தற்கொலை

 விழுப்புரத்தில் பெற்றோா் கண்டித்ததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவி புதன்கிழமை தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்துகொண்டாா்.

 விழுப்புரத்தில் பெற்றோா் கண்டித்ததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவி புதன்கிழமை தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்துகொண்டாா்.

விழுப்புரம்,கிழக்குசண்முகபுரம் காலனி , திருப்பாழ்வாா் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (53). இவரது மகள் நித்யாஸ்ரீ( 15). விழுப்புரத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 10- ஆம் வகுப்பில் பயின்று வந்தாா். மாணவி நித்யாஸ்ரீ கடந்த ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இதை பெற்றோா் கண்டித்ததால் ஆத்திரமடைந்த நித்யாஸ்ரீ புதன்கிழமை வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து, விழுப்புரம் நகர காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com