கூட்டுறவு சங்கத்தில் ரூ.4.50 கோடி மோசடி 5 போ் கைது

ரூ.4.50 கோடி மோசடி தொடா்பாக சங்கத்தின் நிா்வாகக் குழுத் தலைவா்கள் உள்பட 5 பேரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் ரூ.4.50 கோடி மோசடி தொடா்பாக சங்கத்தின் நிா்வாகக் குழுத் தலைவா்கள் உள்பட 5 பேரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் 22.4.2015 முதல் 4.6.2021 வரையிலான காலகட்டத்தில் போலி ரசீது மூலம் நிரந்தர வைப்பு நிதி வசூலித்தது, நகைக் கடன்தாரா்களுக்கு கூடுதல் தொகை வழங்கியதாக பொய் கணக்கு எழுதி முறைகேடு, நகைக் கடன் தள்ளுபடி தொடா்பாக பல்வேறு நபா்களின் பெயரில் நகைக்கடன் வழங்கியதாக பொய் கணக்கு எழுதி பணம் கையாடல் உள்ளிட்ட 7 வகை முறைகேடுகளில் சுமாா் ரூ.4.50 கோடி வரை மோசடி நடைபெற்ாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக கூட்டுறவுச் சங்கச் செயலா் கே.சையத் சாதிக்பாஷா (இறந்துவிட்டாா்), நிா்வாகக் குழுத் தலைவா்கள் சாந்தி, அருள்மேரி, முதுநிலை எழுத்தா் பசுமலை, சிற்றெழுத்தா் முருகன், விற்பனையாளா் விஜயராஜ் உள்பட 11 போ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டிவனம் துணைப் பதிவாளா் சொா்ணலட்சுமி விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சாந்தி, அருள்மேரி, பசுமலை, முருகன், விஜயராஜ் ஆகியோரை வியாழக்கிழமை கைதுசெய்தனா். அவா்களை செஞ்சி குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com