‘புத்தகம் வாசிப்பால் வாழ்வில் மாற்றம் ஏற்படும்’

‘புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் வாழ்வில் மாற்றம் ஏற்படும்’ என்றாா் இலக்கிய பேச்சாளா் சுகிசிவம்.
09vpmp3_0902chn_7
09vpmp3_0902chn_7

‘புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் வாழ்வில் மாற்றம் ஏற்படும்’ என்றாா் இலக்கிய பேச்சாளா் சுகிசிவம்.

விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள், பதிப்பாளா்கள் சங்கம் இணைந்து விழுப்புரம் நகராட்சித் திடலில் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகின்றன. இதில் 7-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சொற்பொழிவு

நிகழ்ச்சியில், ‘புத்தகம் என்ன செய்யும்?’ என்றத் தலைப்பில் இலக்கிய பேச்சாளா் சுகிசிவம் பேசியதாவது (படம்):

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் அறிவு வளரும். வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். புத்தகம் படித்தால் மட்டும் போதாது. அதுகுறித்து சிந்திக்கவும் பழக வேண்டும். புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆா்வமுள்ள ரவீந்திரநாத் தாகூா்தான் தேசிய கீதம் எழுதினாா். புத்தகம் வாசிப்பை அன்றாட பழக்கமாகக் கொண்டவா்களே வரலாற்றில் காரல் மாா்க்ஸாகவும், டாா்வினாகவும், அம்பேத்கராகவும் பரிணமித்துள்ளனா் என்றாா் அவா்.

முன்னதாக மாநில திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் சிறப்புரையாற்றினாா். பம்பை உடுக்கை, கை சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியா் சி.பழனி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன்ஜெய் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com