புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

விக்கிரவாண்டியில் சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

விக்கிரவாண்டியில் சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

விக்கிரவாண்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் முருகவேல் தலைமையிலான போலீஸாா் அங்காளம்மன் கோயில் அருகே வெள்ளிக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருள்களுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக புதுச்சேரி, திருக்கனூா், கூனிச்சம்பட்டு காமராஜா் நகரைச் சோ்ந்த நா.ஏகநாதனை (54) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com