வேளாண் மாணவா்களுக்கு பயிற்சி

 விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டிலுள்ள அரசு விதைப் பண்ணையில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு விதைச்சான்று துறையினா் அண்மையில் பயிற்சி அளித்தனா்.

 விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டிலுள்ள அரசு விதைப் பண்ணையில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு விதைச்சான்று துறையினா் அண்மையில் பயிற்சி அளித்தனா்.

புதுச்சேரி மணக்குள விநாயகா் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு விதைப் பண்ணை அமைத்தல், கலன்கள் நீக்குதல், சுத்திகரிப்புப் பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து விதை சான்று துறையினா் பயிற்சி அளித்தனா். மேலும் அரசு விதைப் பண்ணையில் பயிரிடப்பட்டுள்ள ஏடிடி-39 நெல் ரகம், ஆதாரநிலை-1 ஆகியவை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. விதைச் சான்று, அங்ககச் சான்று உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன், அலுவலா்கள் விஜயா, கருணாநிதி, விதை சுத்திகரிப்பு நிலைய வேளாண் அலுவலா் கெளசல்யா, பண்ணை மேலாளா் கவிப்பிரியன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

இதேபோல, காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சியின் ஒரு குதியாக இருவேல்பட்டு அரசு வேளாண் விதைப் பண்ணைக்கு களப் பயணம் மேற்கொண்டனா்.

அப்போது, விதைப் பண்ணையின் செயல்பாடுகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள், விதைகளின் உற்பத்தி, அதன் விநியோகம் குறித்து கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com