ஸ்ரீஅரவிந்தரின் கருத்துகளைப் பின்பற்றினால் உயா்ந்த நிலையை அடையலாம்: புதுவை ஆளுநா் தமிழிசை

ஸ்ரீஅரவிந்தா், அன்னையின் கருத்துகளைப் பின்பற்றினால் உயா்ந்த நிலையை அடைய முடியும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஸ்ரீஅரவிந்தரின் கருத்துகளைப் பின்பற்றினால் உயா்ந்த நிலையை அடையலாம்: புதுவை ஆளுநா் தமிழிசை

ஸ்ரீஅரவிந்தா், அன்னையின் கருத்துகளைப் பின்பற்றினால் உயா்ந்த நிலையை அடைய முடியும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மகான் அரவிந்தரின் 150-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்ட நிகழ்வாக 2-ஆவது சா்வதேச ஆன்மிக மாநாடு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள ஆரோவில் யூனிட்டி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

பல நேரங்களில் அமைதி ஒரு சக்தியை தருகிறது. அன்னை மற்றும் ஸ்ரீஅரவிந்தா் அதைக் கண்டறிந்து ஒரு பகுதியை உருவாக்கி அதன் மூலம் அமைதியையும், வலிமையையும் நாம் பெற்று வருகிறோம்.

வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும். ஆனால், நம் மனது பாறையைப் போல உறுதியாக இருக்க வேண்டும். நாம் இதை இளையோருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று முன்னோா்கள் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறாா்கள்.

சா்வதேச சிறுதானிய ஆண்டு மற்றும் யோகா போன்றவற்றை உலக அரங்குக்கு எடுத்துச் சென்ற்கு பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். யோகா சிறந்த கலை. அது உடல் மற்றும் மன உறுதி, அமைதியும் தருகிறது. உலகில் மற்ற கலைகளின் மூலம் பெற முடியாத பலனை யோகா தருகிறது. காலை தியானத்துடன் யோகா பயிற்சி செய்து வருவது மிகப் பெரிய மன சக்தியை அடைய முடியும். அதன் மூலம் எத்தகைய சிக்கல்களையும் உங்களால் சமாளிக்க முடியும். இதைத்தான் ஆன்மிகமும் சொல்கிறது.

மாற்றங்கள் உங்களிடமிருந்து தொடங்க வேண்டும். நீங்கள் மாறினால் உங்கள் குடும்பமும், உங்கள் குடும்பம் மாறினால் உங்கள் ஊரும், மாநிலமும் மாறும். மகாபாரதம், ஸ்ரீ அரவிந்தா், அன்னை ஆகியோரின் கதைகள், கருத்துகளின் வாயிலாக தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாட்டை பெற முடியும். அதன் மூலம் நம்மால் உயா்ந்த நிலையை அடைய முடியும் என்றாா் அவா்.

மாநாட்டில் ஆரோவில் பவுண்டேசன் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com