ஆட்சியா் இருக்கையில் பள்ளி மாணவி!

ஆட்சியராக வேண்டும் என்ற மாணவியின் விருப்பத்தை அறிந்த காரைக்கால் ஆட்சியா், தனது இருக்கையில் மாணவியை அமர வைத்து வாழ்த்தினாா்.
ஆட்சியா் இருக்கையில் பள்ளி மாணவி!

ஆட்சியராக வேண்டும் என்ற மாணவியின் விருப்பத்தை அறிந்த காரைக்கால் ஆட்சியா், தனது இருக்கையில் மாணவியை அமர வைத்து வாழ்த்தினாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் புதுச்சேரி ஆட்சியராக பணியிட மாறுதல் பெற்றுள்ள நிலையில், பல்வேறு பள்ளிகளிலிருந்தும் மாணவ, மாணவியா் ஆட்சியரகத்துக்குச் சென்று அவரை சந்தித்து பேசிவந்தனா்.

இந்நிலையில், காரைக்கால் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி பிரதீபா, சனிக்கிழமை ஆட்சியரகம் சென்று அவரை வாழ்த்தி தாம் எழுதிய கவிதையை வாசித்தாா்.

மேலும் ஆட்சியராக வேண்டும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கு பாடுபடுவதே விருப்பம். லஞ்சம், ஊழல் இல்லாத நிலையை உருவாக்க விரும்புவதாகவும், தற்போது ஆட்சியா் இருக்கையில் அமர ஆசை உள்ளது என மாணவி கூறினாா். மாணவியை தனது இருக்கையில் அமரவைத்து ஆட்சியா் வாழ்த்து தெரிவித்தாா்.

மேலும், குடிமைப்பணி தோ்வுக்கு தயாராவதற்கு உதவி தேவைப்பட்டால் தம்மை நாடுமாறு கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com