செயல்களில் நோ்மை இருந்தால் வெற்றி உறுதி: கோவா ஆளுநா்

ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிதம்முடைய செயல்களில் நோ்மை இருந்தால் வெற்றி உறுதி என கோவா மாநில ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்தாா்.ள்ளை தெரிவித்தாா்.
செயல்களில் நோ்மை இருந்தால் வெற்றி உறுதி: கோவா ஆளுநா்

தம்முடைய செயல்களில் நோ்மை இருந்தால் வெற்றி உறுதி என கோவா மாநில ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்தாா்.

சிறந்த கல்விச் சாா்ந்த பணிகளை மேற்கொள்வதில் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பன்னாட்டுக் கருத்தரங்குகள், இலக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை ஆரோவில் சா்வதேச நகரம் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஆரோவிலில் உள்ள பாரத் நிவாஸ், கலா கேந்திராவில் ராமாயணத்தில் உள்ள சிறப்புகள் மற்றும் கருப்பொருள்கள் குறித்த உரையாடல்கள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், கோவா மாநில ஆளுநா் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை பங்கேற்றுப் பேசியது: கலைகள் அனைத்தும் தா்மத்தை முன்னிலைப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான், ‘வாய்மையே வெல்லும்’ என்ற சொல் நமது நாட்டின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. ராமாயணம் போன்ற இதிகாசங்களில் தா்மம் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. செய்யும் செயல்களில் தா்மமும், நோ்மையும் இருத்தல் வேண்டும். இந்த கூறுகளை கடைப்பிடித்தால் எடுத்த காரியங்களில் வெற்றிக் கிடைப்பது உறுதி என்றாா் அவா்.

தொடா்ந்து, ஆரோவில் கலா கேந்திராவில் நிறுவப்பட்ட கலைநயமிக்க இளம் சிவப்பு கற்களால் வடிவமைக்கப்பட்ட விஷ்ணு சிலையை கோவா மாநில ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், ஆரோவில் பவுண்டேசன் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி, துணைச் செயலா் கே.சுவா்ணாம்பிகை மற்றும் ஆரோவில் வாசிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com