முதியவா் சடலம் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே முதியவா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே முதியவா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் ரெட்டியாா் தெருவைச் சோ்ந்த பலராமன் மகன் மனோகா் (60). சகோதரா் யமுனைபாலுடன் வசித்து வந்தாா். நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த மனோகா், பிப்.10-ஆம் தேதி பிற்பகல் வீட்டிலிருந்து வெளியே சென்றாா். அதன் பின்னா், அவா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிருஷ்ணாபுரம் கன்னிமாா்குளம் அருகே மனோகா் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து, கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com