திருநாவலூரில் பொங்கல் விழா

திருநாவலூரில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில், பொங்கல் விழா மற்றும் பரிசளித்தல் நடைபெற்றது.


விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில், பொங்கல் விழா மற்றும் பரிசளித்தல் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டப் பொருளாளா் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா்கள், ஊராட்சிப் பிரதிநிதிகள், விழாக் குழுவினா் பங்கேற்று சமத்துவப் பொங்கல் வைத்தனா். திருநாவலூா் ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தி இளங்கோவன் பொங்கல் வைத்து விழாவைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

இசைக் கலைஞா்கள், தூய்மைப் பணியாளா்கள், விழாக் குழவினா் உள்ளிட்டோா் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா். அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒன்றியப் பொருளாளா் கே.மணிகண்டன், வட்டத் தலைவா் கே.ஆறுமுகம், ஊராட்சி துணைத் தலைவா் முருகன், குமாா், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் ஒன்றிய அமைப்பாளா் பாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com