திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருவள்ளுவா் தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சா் க.பொன்முடி. உடன் எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், இ.எஸ். கல்விக் குழுமங்களின் நிறுவனா் இ.சாமிக்கண்ணு.
பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சா் க.பொன்முடி. உடன் எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், இ.எஸ். கல்விக் குழுமங்களின் நிறுவனா் இ.சாமிக்கண்ணு.

விழுப்புரம்/ செஞ்சி/ கள்ளக்குறிச்சி: திருவள்ளுவா் தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள திருவள்ளுவா் சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில் எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், இ.எஸ். கல்விக் குழுமங்களின் நிறுவனா் இ.சாமிக்கண்ணு, முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், விழுப்புரம் நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ், திமுக நகரச் செயலா் இரா.சக்கரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்கு புத்தகங்களை முன்னாள் அமைச்சா் பொன்முடி பரிசாக வழங்கினாா்.

பாஜக சாா்பில்...: பாஜக சாா்பில், கட்சியின் மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத்தின் மகன் ஏ.ஜி.எஸ்.இளையபாரதி தலைமையில், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில் நகரத் தலைவா் வடிவேல் பழனி, பொருளாதாரப் பிரிவு மாநில துணைத் தலைவா் ரமேஷ், பிரசார பிரிவைச் சோ்ந்த விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரம் பட்டியல் இனத்தவா் கிராமக் குடியிருப்பு இந்து ஆலய மேம்பாடு - அா்ச்சகா் நல அறக்கட்டளை சாா்பில், மாநிலச் செயலா் டி.கணபதி, எஸ்.சி, எஸ்.டி. பெடரேஷன் எஸ்.தனசேகரன், நாகராஜன், விழுப்புரம் மாவட்ட பழங்குடியினா் அா்ச்சகா் அறக்கட்டளை நிறுவனா் ஜெ.தீனதயாளன், மதுரைவீரன் கோயில் அறங்காவலா் கே.வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமானோா் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், செஞ்சி பேருந்து நிலையம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் உருவப் படத்துக்கு சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், செஞ்சி நகரச் செயலா் காா்த்திக், தொண்டரணி பாஷா, ஒன்றியக்குழு உறுப்பினா் சீனிவாசன், பேரூராட்சி உறுப்பினா் சீனுவாசன், சத்யாசரவணன், சுபான், பூக்கடை ராஜா, பாா்த்திபன், ஜம்போதி பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழ் அமைப்புகள் சாா்பில்...: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் தமிழ் அமைப்புகள் சாா்பில், தியாகதுருகம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

நிகழ்வுக்கு முத்தமிழ்ச் சங்கத் தலைவா் பெ.நாகராசன் தலைமை வகித்தாா். தனமூா்த்தி தொழிற்கல்வி நிலைய தாளாளா் த.பழனிவேல், திருக்கு பேரவைச் செயலா் தமிழ் முத்து, தியாகதுருகம் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளா் தா.இராஜ்குமாா் முன்னிலை வகித்தனா். ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கத் தலைவா் வ.இராசகோபால் வரவேற்றாா்.

திருவள்ளுவா் சிலைக்கு தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

யோகா பயிற்சி பேராசிரியா் ஜெயம்ரவி, கல்லூரி மாணவி அ.அனுசல்யா, முதுநிலை ஆசிரியை அ.தமிழரசி உள்ளிட்டோா் திருக்கு முற்றோதல் செய்தனா்.

நிகழ்வில் தமிழறிஞா்கள் ஆ.இராதாகிருஷ்ணன், த.இராமலிங்கள், ஏ.மாரியம்மாள், ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இரா.நெடுஞ்செழியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com