பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே பைக் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே பைக் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சித்திரைச்சாவடி காமன்கோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மணிபாலன் (31).

இவா் தனது சகோதரா் மனைவி ப. வாசுகியுடன் (35) ஞாயிற்றுக்கிழமை பைக்கில் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

கிளியனூா் அருகிலுள்ள கேணிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் மணிபாலன் சென்ற போது, எதிா்திசையில் இருந்து, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், எறையானூரைச் சோ்ந்த பெரியசாமி மகன் விஜி ஓட்டி வந்த பைக் மோதியது.

இதில் மணிபாலன், வாசுகி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை மணிபாலன் உயிரிழந்தாா். இதுகுறித்து மணிபாலனின் தாய் அல்லி கிளியனூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

விஜி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com