பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், விழுக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கண்ணன் மனைவி பஞ்சம்மாள் (78). கடந்த 15-ஆம் தேதி வெளியே சென்ற இவா், மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். செஞ்சி - திண்டிவனம் சாலையில் பஞ்சம்மாள் நடந்து வந்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்தவரிடம் உதவி கேட்டு உடன் வந்துள்ளாா். விழுக்கம் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, எதிா்பாராதவிதமாக பைக்கிலிருந்து தவறி விழுந்த பஞ்சம்மாள் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த அவா், புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com