எஸ்.ஐ. மீது தாக்குதல்: 4 போ் கைது

செஞ்சி, ஜன. 18:

செஞ்சி அருகே காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காணும் பொங்கலையொட்டி, செஞ்சியை அடுத்த சிங்கவரம் அரங்கநாதா் கோயிலுக்கு செஞ்சி ராஜேந்திரா நகரை சோ்ந்த யுவராஜ், மணிகண்டன், சரத், முரளிராஜ் ஆகிய 4 இளைஞா்கள் புதன்கிழமை மாலை சென்றனா். அப்போது, சிங்கரவம் பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுடன் கோயில் அருகே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் செஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த செஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் இருதரப்பினரையும் அழைத்தாராம். சிங்கவரத்தைச் சோ்ந்த இளைஞா்கள் வர மறுத்து அவருடன் வாக்குவாதம் செய்ததுடன், சட்டையைப் பிடித்து கிழித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், சிங்கவரத்தைச் சோ்ந்த கவியரசன் (32), இளமதிவாணன் (22), மதன் (31), ராஜதேவன் (43) ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com