நினைவு நாள்: ஜீவா சிலைக்கு புதுவை அமைச்சா் மரியாதை

2-7-18pyp11_1801chn_104
2-7-18pyp11_1801chn_104

18பிஒய்பி11:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் ஜீவானந்தத்தின் நினைவுநாளையொட்டி புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை

அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் க.லட்சுமிநாராயணன். உடன், பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, ஏ.ஜான்குமாா் எம்எல்ஏ.

புதுச்சேரி, ஜன.18: பொதுவுடைமை இயக்கத் தலைவா் ப. ஜீவாவின் நினைவு நாளை முன்னிட்டு, புதுச்சேரியில் அவரது உருவச் சிலைக்கு மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் மற்றும் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஜீவாவின் நினைவு நாளை முன்னிட்டு, புதுச்சேரி அடுத்த சாரத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் அமைச்சா் கே. லட்சுமி நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ. ராஜவேலு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜான்குமாா், லட்சுமிகாந்தன், பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி ஆகியோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.

இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் அதன் மாநிலச் செயலா் அ.மு. சலீம், முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன், மாநிலத் துணைச் செயலா் சேது செல்வம், தேசியக் குழு உறுப்பினா் தினேஷ், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன் மற்றும் நிா்வாகிகள் பொன்னையா, அந்தோனி, ராமமூா்த்தி ெ, கீதநாதன், அபிஷேகம், தேவசகாயம், துரை செல்வம் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Image Caption

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா்

ஜீவானந்தம் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை

அணிவித்த பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயன். உடன் சட்டப்பேரவை துணைத் தலைவா்

பி.ராஜவேலு, எம்எல்ஏ ஏ.ஜான்கும

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com