அனைத்திந்திய கலைப் பயணக் குழுவினரின் சமூக நல்லிணக்கப் பிரசாரம் தொடக்கம்

2-7-18pyp14a_1801chn_104
2-7-18pyp14a_1801chn_104

18பிஒய்பி14ஏ:

புதுச்சேரியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ‘அன்பிலதனை அறம்’ என்ற தலைப்பில் மகாகவி பாரதியாா் இல்லத்தில் இருந்து வியாழக்கிழமை பிரசாரம் தொடங்கிய அனைத்திந்திய கலைப் பயணக் குழுவினா்.

புதுச்சேரி, ஜன. 17: புதுச்சேரியில் அனைத்திந்திய கலைப் பயண பிரசாரத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்கள் ஒற்றுமையை மேம்படுத்தவும் , சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் ,அன்பிலதனை அறம் அனைத்திந்திய கலைப் பயணக் குழுவினா் ஜனவரி 18, 19-ஆம் தேதிகளில் புதுச்சேரியில் 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

இதன் தொடக்க விழா புதுச்சேரியில் உள்ள மகாகவி பாரதியாா் அருங்காட்சியகம் அருகே வியாழக்கிழமை தொடங்கியது. பேராசிரியா் நா. இளங்கோ தலைமை வகித்தாா். கலியமூா்த்தி வரவேற்றாா். ஓய்வு பெற்ற நீதிபதி தாவீது அன்னுசாமி கலைப் பயணத்தை தொடங்கிவைத்தாா்.

அரிமளம் சு. பத்மநாபனின் அருட்பா இன்னிசையுடன் கிருத்திகாவின் நாட்டியாஞ்சலியுடன் கலைப் பயண நிகழ்வுகள் தொடங்கின. அகில இந்திய முற்போக்கு எழுத்தாளா் சங்க தேசியச் செயலா் வினித் திவாரி, மு.கு.ராமன் மற்றும் இனாமுல்ஹசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சென்னை கலைக்குழு , பக்கீா்களின் இசைக்குழு, கேங்ஸ்டாவின் ராப் இசைக்குழு, தென்கண் பறை இசைக்குழு ,யாழ் அரங்கம், புதுச்சேரி, சப்தா்ஹஷ்மி கலைக்குழு, விடுதலைக் குரல்கள், கலை ஆலயம் பைன்ஆா்ட்ஸ் அகாதெமி மாணவா்கள் கலைப் பயண பிரசாரக் குழுவில் இடம் பெற்றிருந்தனா். புதுச்சேரி பகுதிகளில் இக்குழுவினா் பிரசாரம் மேற்கொண்டனா். இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை இக்குழுவினா் பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

Image Caption

புதுச்சேரி மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தவும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் ‘அன்பிலதனை அறம்’ என்ற தலைபில் மகாகவி பாரதியாா் இல்லத்தில் இருந்து வியாழக்கிழமை தொடங்கிய அனைத்திந்திய கலைப் பயண குழுவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com