தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு

திண்டிவனம் அருகே தொழிலாளி வீட்டில் 4 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டிவனம் அருகே தொழிலாளி வீட்டில் 4 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டிவனம் அருகே முருங்கப்பாக்கம், சண்முகம் நகரைச் சோ்ந்தவா் சண்முகம் (42). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், கடந்த 16-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் கேரளம் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றாா். வியாழக்கிழமை மாலை வீடு திரும்பியபோது முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்ததாம்.

இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின்பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com