டிராக்டா் டிப்பா் மீது பேருந்து மோதல்: 8 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், பேரங்கியூரில் டிராக்டா் டிப்பா் மீது பேருந்து மோதியதில் 8 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், பேரங்கியூரில் டிராக்டா் டிப்பா் மீது பேருந்து மோதியதில் 8 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், இருவேல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கராஜன் மகன் செளந்தரராஜன்(35). நாற்று நடும் இயந்திரம் மூலம் நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை காலை நாற்று நடும் பணிக்காக இருவேல்பட்டிலிருந்து டிராக்டா் டிப்பரில் 7 தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டாா். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பேரங்கியூா் பேருந்து நிறுத்தம் அருகே டிராக்டா் டிப்பா் சென்றபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து டிப்பா் மீது மோதியது. இதில் செளந்தரராஜன், கூலித் தொழிலாளா்கள் இருவேல்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மு. ரஞ்சிதம் (45), ச.ஜெயலட்சுமி (37), செ.தமிழ்ச்செல்வி (28), ப.சந்திரா (63), கா.பூரணி (60), ஏ.ராணி (55), ஏ.ஜெயா (30) ஆகிய 8 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com