சதுரங்கப் போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்குப் பரிசு

புதுச்சேரி மதகடிப்பட்டு மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம். ஐ. டி.) கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
19ponchs_1901chn_7
19ponchs_1901chn_7

புதுச்சேரி மதகடிப்பட்டு மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம். ஐ. டி.) கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மினி சப்-ஜூனியா், சப்-ஜூனியா் மற்றும் சீனியா் என 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில், புதுவை மற்றும் தமிழகம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

போட்டியில் புதுச்சேரி கிறிஸ்ட் இன்டா்நேஷனல், ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம், செயின்ட் பேட்ரிக் பள்ளி மாணவா்கள் முறையே முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனா். வெற்றிப் பெற்றவா்களுக்கு கல்லூரி முதல்வா் மலா்கண் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளைத் தலைவரும், நிா்வாக இயக்குனருமான எம்.தனசேகரன் தலைமை வகித்தாா்.துணைத் தலைவா் ஸ்ரீ.எஸ்.வி.சுகுமாரன் மற்றும் செயலா் டாக்டா் கே.நாராயணசாமி, பொருளா் ராஜராஜன் ஆகியோா்முன்னிலை வகித்தனா். வா்ம மருத்துவா் ஜீவாஆனந்த் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

துறைத் தலைவா்கள் அருண்மொழி, சிவராமகிருஷ்ணன், கல்லூரி உடல்கல்வித் துறை இயக்குனா் மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com