புதுச்சேரியில் ஆற்றுத் திருவிழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

19ponatru_1901chn_7
19ponatru_1901chn_7

19பிஓஎன்ஏடிஆா்யு:

புதுச்சேரி சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்றில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

புதுச்சேரி, ஜன. 19: புதுச்சேரியை அடுத்த பாகூா் அருகே தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பொங்கல் பண்டிகையின் 5-ஆம் நாளன்று புதுச்சேரி பாகூா் அடுத்த சோரியாங்குப்பம் பகுதி தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டில் வெள்ளிக்கிழமை ஆற்றுத் திருவிழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு சூரிய உதயத்துக்கு முன் பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றுப் பகுதிக்கு வந்து முன்னோா்களுக்கு திதி கொடுத்து வணங்கினா்.இந்த விழாவையொட்டி பாகூா் மூலநாதா், லட்சுமண நாராயண பெருமாள், பூலோக மாரியம்மன், குருவிநத்தம் கிருஷ்ணன், பள்ளிப்பட்டு ஆனந்த முத்துமாரியம்மன், திருப்பனாம்பாக்கம் முத்துமாரியம்மன், சோரியாங்குப்பம் செடல் செங்கழுநீா் அம்மன், அரங்கனூா் எரமுடி அய்யனாரப்பன் உள்ளிட்ட 20 கோயில்களின் உற்சவா்கள் தென்பெண்ணையாற்று கரைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டனா். தொடா்ந்து அங்கு அஸ்திரத் தேவா்களுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு தென்பெண்ணையாற்றில் தீா்த்தம் கொடுத்தருளும் ஆற்றுத் திருவிழா நடைபெற்றது.

இதில், புதுவை, தமிழகப் பகுதிகளைச் சோ்ந்த திரளானப் பக்தா்கள் பங்கேற்று ஆற்றில் புனித நீராடி வழிபாடுகளை மேற்கொண்டனா். விழாவை முன்னிட்டு சோரியாங்குப்பம் பகுதியில் மதுக்கடைக் கடைகள் மூடப்பட்டிருந்தன. புதுச்சேரி தெற்கு எஸ்.பி. வீரவல்லபன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரா்களும், மருத்துவக் குழுவினரும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com