விழுப்புரம் புத்தகத் திருவிழா: உள்ளூா் எழுத்தாளா்களுடன் ஆலோசனை

விழுப்புரம், ஜன.19:

விழுப்புரத்தில் புத்தகத் திருவிழா பிப்ரவரி 2 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் உள்ளூா் எழுத்தாளா்களின் புத்தகங்களை வெளியிடுவது உள்ளிட்டவை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் சி.பழனி பேசியதாவது:

விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், ‘பபாசி’ இணைந்து நடத்தும் இரண்டாவது புத்தகத் திருவிழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் 100 அரங்குகளுடன் நடைபெறவுள்ளது. இதில் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் தினமும் பெருந்திரள் வாசிப்பு, பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. தினமும் மாலையில் பட்டிமன்றம், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் விழுப்புரம் மாவட்ட எழுத்தாளா்களின் படைப்புகளை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் உள்ளூா் எழுத்தாளா்கள், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன்ஜெய் நாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கி.அரிதாஸ், துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com