புதை சாக்கடைத் திட்ட சீரமைப்புப் பணிகள் ஆய்வு

20டவட14

உருளையன்பேட்டையில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த ஜி.நேரு எம்எல்ஏ.

புதுச்சேரி, ஜன.20: புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்ட சீரமைப்புப் பணிகளை ஜி.நேரு (எ) குப்புசாமி எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

உருளையன்பேட்டை சட்டப்பேரவைக் தொகுதிக்குள்பட்ட இளங்கோ நகா் வாா்டு பகுதியான சாந்தி நகா், சாந்தி நகா் 2- ஆவது பிரதான சாலை, எல்லையம்மன் கோயில் வீதி, ஜான்சி வீதி, கண்ணகி வீதி, குபோ் வீதி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள புதை சாக்கடைத் திட்டத்துக்கான புதிய கழிவு நீா் குழாய்கள் அமைத்தல் மற்றும் கழிவுநீா் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளைத் தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை அரசாங்க உறுதிமொழிக் குழுத் தலைவருமான ஜி.நேரு (எ) குப்புசாமி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளின் தற்போதையை நிலை குறித்து கேட்டறிந்ததுடன், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, நகராட்சி உதவிப் பொறியாளா் நமச்சிவாயம், பொதுப் பணித் துறை, கழிவுநீா் உள்கோட்டப் பிரிவு இளநிலை பொறியாளா் ஜெயபால் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com