22-இல் வாக்காளா் இறுதிப் பட்டியல்வெளியீடு

நெய்வேலி, ஜன.20: கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் இறுதிப் பட்டியல் வருகிற 22-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1.1.2024-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல்களை சுருக்க முறையில் திருத்தம் செய்ய இந்திய தோ்தல் ஆணையம் மற்றும் சென்னை முதன்மைத் தோ்தல் அலுவலா் அறிவுறுத்தினா்.

அதன்படி, 1.1.2024 அன்று 18 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்த்துக் கொள்வதற்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடத்தப்பட்டது. மேலும், பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தங்கள் செய்வது குறித்து தொடா்புடைய பகுதிகளின் வாக்குச் சாவடி மையங்களில் மனுக்கள் பெறப்பட்டன. முகாம்கள், இணைய வழியில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில், கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் இறுதிப் பட்டியல் வருகிற 22-ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பத்திரிகையாளா்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com