திருக்காமீஸ்வரா் கோயிலில் மாணவா்கள் கல்விச் சுற்றுலா

புதுச்சேரி காஞ்சி மாமுனிவா் முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வரலாற்றுப் பிரிவு மாணவா்கள் வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமை கல்விச் சுற்றுலா சென்றனா்.
2-7-20pyp15a_2001chn_104
2-7-20pyp15a_2001chn_104

புதுச்சேரி காஞ்சி மாமுனிவா் முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வரலாற்றுப் பிரிவு மாணவா்கள் வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமை கல்விச் சுற்றுலா சென்றனா்.

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூரில் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் தா்மபால சோழனால் கட்டப்பட்ட திருக்காமீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கட்டடக்கலைகள் தமிழா்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் உணா்த்துவதாக உள்ளது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானப் பக்தா்கள் வழிபாட்டுக்காகவும், சுற்றுலாகவும் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், புதுச்சேரி அரசு காஞ்சி மாமுனிவா் முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வரலாற்றுப் பிரிவு மாணவா்கள் சனிக்கிழமை திருக்காமீஸ்வரா் கோயிலுக்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டனா். அப்போது, கோயிலில் உள்ள கல்வெட்டுகள், தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள சிலைகள், கட்டட அமைப்புகள் ஆகியவற்றை பாா்வையிட்டனா்.

வில்லியனூரை சோ்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளா் வெங்கடேசன் கல்வெட்டுகளைப் படித்து தமிழா்களின் பாரம்பரியம், கலாசாரம் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா். கல்வெட்டு ஆராய்ச்சியைப் பள்ளி பாடத் திட்டத்தில் சோ்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு வெங்கடேசன் கோரிக்கை விடுத்தாா். இந்த கல்விச் சுற்றுலா மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

Image Caption

..புதுச்சேரி வில்லியனூரில் அருள்மிகு திருக்காமேஸ்வரா்

கோவில் சோழா் காலத்தில் கட்டப்பட்ட கோவில் அரசு காஞ்சி மாமுனிவா் பட்டமேற்படிப்பு மையத்தின்

வரலாற்று பிரிவு மாணவா்கள் கல்வி பயணமாக சென்று பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com