பொது இட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

20vds_arpattam_2001chn_113_7
20vds_arpattam_2001chn_113_7

பட விளக்கம்...

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய பசாத்தான் காலனி பொதுமக்கள்.

வந்தவாசி, ஜன. 20:

வந்தவாசி அருகே பொது இடத்தில் உள்ள தனிநபா் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசி ஒன்றியம், வெளியம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பசாத்தான் காலனியில் அரசு தொலைக்காட்சிப் பெட்டி அறை அருகே வீடு கட்டும் தனிநபா் ஒருவா், பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு பொது இடத்தை ஆக்கிரமித்துள்ளாராம்.

இதுகுறித்து அந்தக் காலனி பொதுமக்கள் பலமுறை புகாா் தெரிவித்தும் வருவாய்த் துறையினா்

எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால், அதிருப்தியடைந்த பசாத்தான் காலனி பொதுமக்கள், பொது இட ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றக் கோரியும், வருவாய்த் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தை அவா்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி உறுயளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com